2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் ஊடாக காப்புறுதி ஆலோசகர்களுக்கு வெகுமதிகள் அறிமுகம்

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதித் துறையின் முதலாவது வெகுமதி மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சித் திட்டமான – யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் இனை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த விற்பனைத்திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் திறன்களைக் கொண்டுள்ள நிறுவனத்தின் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி வழங்கப்படும் முறையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் பிரதான தொடர்பாடல் பேணுபவராக ஆலோசகர் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் ஆயுள் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் பிரகாரம் தீர்வுகள் வடிவமைப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். யூனியன் அஷ்யூரன்ஸ் பிரீமியர் க்ளப் இனால், உயர்தர வாடிக்கையாளர் தேவை மதிப்பீடுகள் மற்றும் சேவை விநியோகம் ஆகியன ஊக்குவிக்கப்படுவதுடன், அதனூடாக எமது வாடிக்கையாளர்களின் கொள்வனவு மற்றும் பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், எமது காப்புறுதி ஆலோசகர்களுக்கு துறையின் சிறந்த வெகுமதிகள் மற்றும் கௌரவிப்புகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும்.” என்றார்.

இந்த பெருமைக்குரிய ப்ரீமியர் க்ளப் திட்டத்துக்கு தெரிவாகும் காப்புறுதி ஆலோசகர்களுக்கு, பரந்தளவு வாழ்க்கை முறை மற்றும் வியாபார ஊக்குவிப்பு வெகுமதிகள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பரந்தளவு அனுகூலங்களில், எரிபொருளுடன் கம்பனியினால் பராமரிக்கப்படும் சொகுசு வாகனம், பல்வேறு பண அனுகூலங்கள் மற்றும் பிரத்தியேக பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களினூடாக, தொழில்நிலை மேம்படுத்தல்களுக்கான வாய்ப்புகள் போன்றன வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய காப்புறுதி ஆலோசகர் செயலணி என்பது, வாழ்க்கைமுறை கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சிறந்த பாதுகாப்புடனான இலங்கையை நோக்கி நகர்த்தும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .