Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வஸ்கடுவ, சிட்ரஸ் லெய்ஷர் ஹொட்டலில் நடைபெற்ற தனது வருடாந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது, சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகஸ்த்தர்களுக்கு ரிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி விருதுகளை வழங்கியிருந்தது. இதன் போது ரிச்சர்ட் பீரிஸ் குரூப் ஒஃவ் கம்பனிஸ் குழும பணிப்பாளர் விவில் பெரேரா மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரதீப் சமரதுங்க ஆகியோரிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்தியாவின் பிர்லா டயர் கம்பனி மற்றும் உலகப்புகழ் பெற்ற கொரியாவின் நெக்சன் டயர் கம்பனி ஆகியவற்றின் இரண்டு சிரேஷ்ட முகாமையாளர்கள் இந்த வருடாந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில், முதலாவது நாளில் சிறந்த விநியோகஸ்த்தர்களுக்கு விருதும், 2ஆம் நாள், வளவாளராக கலந்து கொண்ட பேராசிரியர் அத்தநாயக்க எம்.ஹேரத்தின் உள்ளார்த்தமான விரிவுரையின் மூலமாக, விநியோகஸ்த்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கவர்ந்திருந்தார்.வழமையாக பின்பற்றப்படுவதைப் போன்று, இந்த ஆண்டும், டயர் விற்பனையாளர்கள் உள்நாட்டு டிரெடிங் மற்றும் ரி-டிரெடிங் போன்றவற்றில் வெவ்வேறு பிரிவுகளில் விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
ரம்புக்கன, சிசிர டயர் ஹவுஸ் உரிமையாளர் டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு. சிசிர குமார அகில இலங்கை ரீதியில் டயர் ரீடிரெடிங் பிரிவில் சிறந்த விநியோகஸ்த்தராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்கள் முறையே திக்வெல்ல சாந்தி டயர் மார்ட் (பிரைவெட்) லிமிட்டெட் முகாமைத்துவப் பணிப்பாளர்
எச்.எம்.டி.ஜே.சாந்திரட்னவுக்கும், 3ஆம் இடததினை், கண்டி சுபிரி டயர் (பிரைவெட்) லிமிட்டெட் தலைவர் கித்சிறி பண்டாரவுக்கு வழங்கப்பட்டது.அதுபோலவே, டயர் டிரேடிங் பிரிவில் சிறந்த விநியோகஸ்த்தருக்கான விருது (அகில இலங்கை மட்டத்தில்) அம்பலாங்கொட, ஜயந்த பிரதர்ஸ் உரிமையாளர் எஸ்.ஜே.வின்னிக்கு வழங்கப்பட்டது. காமினி டயர் வேர்க்ஸ், விநியோகஸ்த்தர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வில், ரிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரதீப் சமரதுங்க கலந்துகொண்டார்.
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago