2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரேணுகாவுக்கு சிறந்த தேங்காய் ஏற்றுமதி வர்த்தக நாமம்

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் 'சிறந்த தேங்காய் ஏற்றுமதி வர்த்தக நாமம்' எனும் விருதை ரேணுகா சுவீகரித்திருந்ததுடன், 'சிறந்த ஏற்றுமதி வர்த்தக நாமம்' மற்றும் 'சிறந்த ஏற்றுமதியாளர் - தேங்காய் துறை' ஆகியவற்றை, ரேணுகா அக்ரி ஃபூட்ஸ் பிஎல்சி சுவீகரித்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் ஏற்றுமதியில் பெருமளவு பங்களிப்பு வழங்கின்றமைக்காக வழங்கப்படும் அதியுயர் விருதுகளை வென்ற தேங்காய் வர்த்தக நாமத்துடன் தொடர்புடைய ஒரே நிறுவனமாக ரேணுகா திகழ்கிறது.

தேசிய அபிவிருத்திக்கு ஏற்றுமதிச் சமூகத்தின் மூலம் வழங்கப்படும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் அமைந்துள்ளதுடன், ஏற்றுமதி வியாபாரத்தில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனிநபர்கள் அல்லது வியாபாரங்களை குறிப்பாக பாரம்பரியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளில், தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. வெற்றியாளர்களை தெரிவு செய்யும் முறை என்பது ஏற்றுமதி வருமானமீட்டலில் வழங்கப்படும் பங்களிப்புகளின் பிரகாரம் அமைந்துள்ளதுடன், பொருட்கள் அபிவிருத்தி, சந்தை அபிவிருத்தி மற்றும் நாட்டின் சமூக அபிவிருத்தி போன்றவற்றில் பங்களிப்பு வழங்குவது என்பவற்றில் தங்கியுள்ளது.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரே தேங்காய்ப்பால் பவுடர் வர்த்தக நாமமாக ரேணுகா அமைந்துள்ளது.  ரேணுகா உற்பத்தி ஆலைகளுக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) ISO 22000- GMP, British Retail Consortium (BRC) மற்றும் London Bethdin Kosher சான்றுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உற்பத்திகளின் உயர் தரம், பாதுகாப்பு மற்றும்

தூய்மை போன்றன உறுதி செய்யப்படுகின்றன. ரேணுகா 100 சதவீதம் இலங்கைத் தயாரிப்பு என்பதுடன், விஸ்தரிப்பு தொடர்பில் பாரியத் திட்டங்களை கொண்டுள்ளது. இதன் பிரகாரம் சர்வதேச ரீதியில் அதிகளவு நம்பிக்கையை வென்ற இலங்கையின் தயாரிப்பு எனும் வகையில் ரேணுகா திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேணுகா வர்த்தக நாமம் தற்போது 25க்கும் மேற்பட்ட உலக நாடுககளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து, பெலிஸ், ஜமெய்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா நாடுகள் உள்ளடங்கியுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஐரோப்பிய சந்தையில் ரேணுகா தயாரிப்பு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 100 தேங்காயை பெறுமதி சேர்த்து, பாரம்பரியமற்ற வகையில் வசதியான முறையில் கிறீம்ட் கொகநட் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அன்று முதல், ஐரோப்பிய சந்தைகளில் இந்த வர்த்தக நாமம் வளர்ச்சியடைந்திருந்ததுடன், சிறந்த சுவையைக் கொண்ட தேங்காய் தயாரிப்புகள் எனும் தற்போது நிலைக்கு உயர்வடைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X