2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

லங்கா SSL விருதுகளை சுவீகரிப்பு

S.Sekar   / 2021 ஏப்ரல் 02 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருக்குக் கம்பிகள் விற்பனையில் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமும், ஈ பீ கிறீஸி அன்ட் கம்பனி பிஎல்சியின் துணை நிறுவனமுமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), தொழிற்துறை சிறப்புக்கான சாதனையாளர் விருதுகள் 2020 இல் உற்பத்திப் பிரிவில், மிகப் பெரிய பிரிவில் தேசிய தங்க விருதை சுவீகரித்திருந்தது.

இலங்கை தேசிய தொழிற்துறைகள் சம்மேளனத்தினால் (CNCI) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கும் வகையில் தர நியமங்களை மேம்படுத்துவது, உற்பத்தித்திறன், வளர்ச்சி மற்றும் தந்திரோபாயம், ஆய்வு மற்றும் விருத்தி, ஊழியர் நலன்புரி மற்றும் இதர செயற்பாடுகள் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் பங்களிப்பு வழங்கியிருந்த நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சாதனைகளை கொண்டாடியிருந்தது.

லங்கா SSL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் CNCI சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளை சுவீகரித்திருந்ததையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். கடந்த முறை மெரிட் விருதை வெற்றியீட்டியதிலிருந்து இம்முறை இரு விருதுகளை வென்றுள்ளமை என்பது உண்மையில் சாதனையாகும். தொடர்ச்சியான தூர நோக்குடைய திட்டங்களை இந்த சாதனைகள் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் சகல பங்காளர்களுக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். லங்கா SSL இல் பணியாற்றும் அனைத்து அர்ப்பணிப்பான ஊழியர்களுக்கும் நாம் நன்றி தெரிவிப்பதுடன், அவர்களால் இந்த சாதனையை எம்மால் எய்த முடிந்தது.” என்றார்.

தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்துக்கான இலங்கை சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர மற்றும் உற்பத்தித்திறன் தேசிய மாநாடு 2020 இல் தங்க விருதையும் லங்கா SSL சுவீகரித்திருந்தது.

ஆண்டின் பிற்பகுதியில், TATA Steel Ltd இன் சர்வதேச உருக்குக் கம்பிகளுடனான தனது நீண்ட கால பங்காண்மையை லங்கா SSL வலிமைப்படுத்தியிருந்தது. இலங்கையில் அதன் சகல பிரீமியம் தரம் வாய்ந்த உருக்குக் கம்பிகளுக்கான ஏக விநியோகத்தரும் முகவருமாக நிறுவனம் திகழ்கின்றது. மேலும், லங்கா SSL அண்மையில்  ‘Permaweld’ வர்த்தக நாமத்திலமைந்த வெல்டிங் electrode களை பொது வெல்டிங் பாவனைக்காக அறிமுகம் செய்திருந்தது.

கடந்த காலங்களில் லங்கா SSL பல்வேறு விருதுகளை சுவீகரித்திருந்தது. இதில் NCCSL இன் தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகளும் அடங்குகின்றன. ISO 9001: 2015 , ISO 45001: 2018 , SLS 31: 1988 மற்றும் SLS 139: 2003 சான்றுகளைப் பெற்ற நிறுவனமாக திகழும் லங்கா SSL, பல்வேறு துறைகளுக்கு உயர் தரம் வாய்ந்த உருக்குக் கம்பிகளை வழங்குவதில் புகழ்பெற்றுள்ளது. குறிப்பாக நிர்மாணத்துறைக்காக, ஒவ்வொரு தேவைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதற்காக உயர் திறமை வாய்ந்த அணியினர் எப்போதும் பணியாற்றிய வண்ணமுள்ளனர். பல்வேறு கருத்துக்கள் மற்றும் தொடர்ச்சியாக மீள நாடும் வாடிக்கையாளர்களினூடாக, நிறுவனத்தின் நம்பிக்கையை வென்ற நாமம் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், 25 வருடங்களாக தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .