Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூய வலுப்பிறப்பாக்கல் சேவைகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள லோட்டஸ் ஹைட்ரோ பிஎல்சி, தனது ஊழியர்களுக்குப் பாரதூர நோய்களுக்கான காப்புறுதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் உடன் கைகோர்த்துள்ளது.
இந்தத் திட்டத்தை வழங்க முன்வந்தமை தொடர்பில், லோட்டஸ் ஹைட்ரோ முகாமைத்துவப் பணிப்பாளரும் மேனக அதுகோரல, ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியுமான ரூபிக தென்னகோன் ஆகியோர் தெரிவிக்கையில், “எமது சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளின் அங்கமாக எமது ஊழியர்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த நாம் தீர்மானித்தோம். குறிப்பாக, எமது ஊழியரான லியனகே, விபத்தொன்றின் காரணமாக உயிரிழந்த போது, அவரின் குடும்பத்தாருக்கு அனுகூலமளிக்கும் வகையில் பாரியளவு கொடுப்பனவொன்றை இந்தக் காப்புறுதியினூடாகப் பெற்றுக் கொடுக்க முடிந்தது” என்றனர்.
குறிப்பாக பெருமளவான நிறுவனங்கள் காப்புறுதி என்பது ஒரு சுமையாக மாத்திரமே கருதுவதுடன், அவற்றை பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இதனால் குறித்த நிறுவனங்களின் ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
லோட்டஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான மேனக அதுகோரலயின் பரிந்துரைப்பின் அடிப்படையில், பரிபூரண காப்புறுதியை பெற நிறுவனம் தீர்மானித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago