2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாகன இறக்குமதி வரியில் மாற்றம் இருக்காது

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம்  ஆண்டுக்கான வாகன இறக்குமதி வரியில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படாது என்று தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.   

நவம்பர் மாதம் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதி மீது விதிக்கப்படும் வரியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என பரவலான எதிர்பார்ப்புகள் காணப்பட்ட போதிலும், மே மாதம் நிதி அமைச்சருடன் மேற்கொண்டிருந்த சந்திப்புகளில் கலந்துரையாடல்களில் தற்போது காணப்படும் இறக்குமதி வரியில் இரண்டு வருடங்களுக்கு எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு தமக்கு திட்டமில்லை என குறிப்பிட்டிருந்ததாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே தெரிவித்தார்.   

பொது மக்கள் மத்தியில் வாகன விலைகள் வீழ்ச்சியடையும் என்ற பரவலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன சந்தையில் தற்போது தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வாகன பதிவில் வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X