Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
விழிப்புலனற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு இருபது ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு, விழிப்புலனற்றவர்களுக்கான, இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு இந்தியாவின், விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கெட் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுப்போட்டி கடந்த 17ஆம் திகதி இந்தியாவின் கொச்சி நகரில் ஆரம்பமானது. இது எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தம்முடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரதும் அபிலாஷைகளை மேம்படுத்த எப்போதும் ஆதரவளித்துவரும் Regus Sri Lanka, இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்துள்ளதுடன், விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சங்கத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி, தேசிய அணியை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிக்கும் இந்த முன்னெடுப்பு தொடர்பில், Regus Sri Lanka இன் இலங்கைக்கான வதிவிட முகாமையாளரான கலாநிதி நிர்மல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,
'விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான நோபேட் சில்வா மூலமாக, அணியினர் எம்மை அணுகிய போது இந்த முன்னெடுப்பு தொடர்பாக நாம் கருத்தில் கொண்டதுடன், கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறப்பாக விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்கு வாய்ப்பளிக்கத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம்.
வியாபார முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்கள் அல்லது பாரிய பல்தேசிய நிறுவனங்கள் என எதுவாக இருப்பினும், எமது வாடிக்கையாளர்கள் மிகவும் வெற்றிகரமான பெறுபேறுகளை ஈட்டுவதற்கு உதவுவதில் சுநபரள எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளது. சமூகத்தைப் பொறுத்த வரையில் இதே அணுகுமுறையே பின்பற்றப்படுகின்றது. கிரிக்கெட் விளையாட்டின் மீது இலங்கையில் ஏராளமானோர் மிகுந்த ஆவல் கொண்டுள்ளதுடன், இந்தச் சுற்றுப்போட்டிக்கு Regus மற்றும் ஒட்டுமொத்த தேசமும், அணிக்கு ஆதரவளிப்பதை வலியுறுத்தும் வகையில் தேசிய அணியை ஊக்குவிக்க நாம் விரும்பினோம்.' என்று தெரிவித்துள்ளார்.
20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago