S.Sekar / 2021 மார்ச் 10 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா, வடமாகாணம் முழுவதும் பாவனையாளர் அனுபவத்தை துரிதமாக மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு 900 MHz ஒலி அலைக்கற்றை இலக்கை பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்துவது மேம்பட்ட வலையமைப்பு அனுபவத்தை பாவனையாளர்களுக்கு ஏற்படுத்துவதோடு, அதனூடாக புவியியல் ரீதியாக விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு முழுமையான தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க முடியுமென்பது விசேட விடயமாகும். இந்த வலையமைப்பு மேம்பாடானது அந்த பகுதியில் Airtel 4G சேவைகளை எதிர்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் பிரதம் நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஆஷீஷ் சந்திரா, “புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்தப்படுவது எமது வளர்ச்சி மூலோபாயத்திற்கு முக்கியமானது. Spectrum சிறந்த உள்ளக அனுபவத்தை செயல்படுத்த சிறந்த சமிக்ஞை ஊடுருவலை அனுமதிப்பதுடன் எமது அதிர்வெண் அலைவரிசைகள் மீதான திறனை விடுவிக்கிறது, இதன் மூலம் பிராந்தியத்தின் பாரிய மக்கள் தொகையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய எமக்கு உதவுகிறது.” என தெரிவித்தார்.
பாவனையாளர் அனுபவத்தை உச்ச அளவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த மேம்பாடுகளானது எயார்டெல் லங்காவினால் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
37 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
51 minute ago