Johnsan Bastiampillai / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தற்போது அமலிலுள்ள வாகன இறக்குமதித் தடை காரணமாக, சுமார் 100,000 தொழில்களும் அவற்றில் தங்கியிருக்கும் 350,000 பேரும் பாதிக்கப்படுவதுடன், இந்தத் துறையில் தங்கியுள்ள இதர சேவைகளும் தொழிற்றுறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, மோட்டார் வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருந்த வரி வருமானமும் தற்போது பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்காளர்கள், விற்பனை பிரதிநிதிகள், சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சாரதிகள், தூய்மைப்படுத்துநர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் எனப் பலதரப்பட்ட ஊழியர்கள், இந்த வாகன இறக்குமதித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
மேலும், வாகன இறக்குமதியுடன் தொடர்புடைய இதர துறைகளில் விடுவிப்பு முகவர்கள், உள்ளக தூய்மைப்படுத்துநர்கள், பொறியியலாளர்கள், வாகனங்கள் கொண்டு செல்லும் பார ஊர்தி சாரதிகள், சேவை நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரி வருமானத்தில் முக்கிய அங்கம் பெறும் துறையாக வாகன இறக்குமதித் துறை காணப்படுகின்றது.
அரசியல்வாதிகள், வரிச் சலுகை வைத்திருக்கும் அரச ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினர், வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, வரியாகச் செலவிடும் தொகை, செலவிடப்படும் டொலர்களின் பெறுமதியை விட மூன்று மடங்காக அமைந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் வரியாக, 270 சதவீதத் தொகை செலுத்தப்படுகின்றது என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உள்நாட்டு பொருளாதார வல்லுநர்களின் தவறான அபிப்பிராயங்கள், கொள்கைகள் காரணமாக, அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய பெருமளவு வரிப் பணத் தொகை, இந்த இறக்குமதித் தடையால் கிடைக்காமல் போவதாக, இந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செயற்பாடு காரணமாக, பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், உயர் தர வாகனமொன்றைக் கொள்வனவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டு, குறைந்த தரத்திலமைந்த சீன, இந்திய வாகனமொன்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக, அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago