2024 மே 04, சனிக்கிழமை

வாடிக்கையாளர் சேவை வாரம் 2023 ஐ கொண்டாடும் SLT-MOBITEL

Freelancer   / 2023 ஒக்டோபர் 06 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையான வாடிக்கையாளர் சேவை வாரம் 2023 ஐ கொண்டாடும் வகையில், SLT-MOBITEL தனது வாடிக்கையாளர்களுக்கு பல விறுவிறுப்பான சலுகைகளையும், சேமிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளதுள்ளதுடன், புதிய வாடிக்கையாளர்களுக்கு வலையமைப்பின் வலிமையை அனுபவிக்க ஊக்குவிக்கின்றது.  

ஹோம் மற்றும் மொபைல் இணைப்புகளின் புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான சலுகைகள் மற்றும் டிஜிட்டல் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இணைப்புத்திறனை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

Home Broadband தீர்வுகளின் கீழ், SLT-MOBITEL இடமிருந்து புதிய இணைப்புகளுக்காக இலவச டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. SLT-MOBITEL Fibre புதிய இணைப்புகளுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100GB போனஸ் டேட்டா மற்றும் 30 நாட்களுக்காக 100GB Entertainments Combo Pack வழங்கப்படும். 4G LTE புதிய இணைப்புகளுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50GB போனஸ் டேட்டா மற்றும் Youth Add on ஆக 20GB டேட்டா 30 நாட்களுக்கும் வழங்கப்படும். வாடிக்கையாளர் சேவை வாரத்தின் போது, வாடிக்கையாளர்களுக்கு மேலும் தெரிவு செய்யப்பட்ட சாதனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு 50% எனும் உயர் விலைக்கழிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு SLT-MOBITEL இடமிருந்து Eazy Storage வசதியாக 50GB மற்றும் உயர்ந்த அளவு இடவசதிகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு முதல் மாதத்துக்கான டேட்டா கட்டணம் முற்றிலும் இலவசம். நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் தமது கடன் அட்டைகளினூடாக கொடு்பபனவுகளை மேற் கொள்ள வேண்டும்.

மொபைல் பிரிவில், வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட Samsung ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூ. 90,000 வரையான இலவச சாதனங்கள் விலைக்கழிவுகளை அனுபவிக்க முடியும். மேலும் வாடிக்கையாளர் சேவை வாரத்தில் 30 GB டேட்டா மற்றும் 15% சேமிப்பையும் அனுபவிக்க முடியும். மேலும், மொபைல் வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகமான அனுகூலங்களில், பிற்கொடுப்பனவு புதிய வாடிக்கையாளர்களுக்கு 2GB மற்றும் 10GB மேலதிக டேட்டாவை தெரிவு செய்யப்பட்ட பக்கேஜ்களுக்கு அனுபவிக்க முடியும். முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பக்கேஜ்களுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மேலதிக 10GB டேட்டா வழங்கப்படும்.

mCash App இனூடாக ரூ. 1000 க்கு அதிகமான கொடுப்பனவுகளுக்கு mCash சலுகை செல்லுபடியாகும். வாடிக்கையாளர்களுக்கு 5GB டேட்டா, 300 M2M நிமிடங்கள் மற்றும் SMSகள் கிடைக்கும். ரூ. 200க்கு மேற்பட்ட ரீலோட்களுக்கு அவர்களுக்கு 2GB டேட்டா வழங்கப்படும். இவற்றுடன் mTunes மற்றும் News alert சேவைகளுக்கு ஒரு மாத காலப்பகுதிக்கு இலவச பதிவும் வழங்கப்படும்.

விசேட வாரத்தில், வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ரோமிங் பிளான்கள் மீதான வாடகையில் 10% விலைக்கழிவை அனுபவிக்க முடியும். மேலும், தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் IDD அழைப்புகளின் போது ஒவ்வொரு நான்காவது நிமிடமும் இலவசமாக வழங்கப்படும். 0710 755 777 ஊடாக SLT-MOBITEL Mobile WhatsApp Virtual Assistant உடன் தொடர்புகளை பேணும் வாடிக்கையாளர்களுக்கு, ஏனைய டிஜிட்டல் நாளிகைகளையும் பார்வையிட்டு விறுவிறுப்பான பரிசுகளை வெல்லலாம்.

வாடிக்கையாளர் சேவை வாரத்தினால், SLT-MOBITEL இன் புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற இணைப்பு தீர்வுகளை அனுபவிக்க முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சிறந்த சேவைகள் மற்றும் தீர்வுகளினூடாக பெறுமதி சேர்ப்பதற்கான அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .