Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிப்பன்னவில் அமைந்துள்ள Mahindra Ideal Lanka Pvt Ltd. (MILPL) தொழிற்சாலையில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வாகன பொறியியலாளர், தமது பயிற்சி காலப்பகுதியை பூர்த்தி செய்து தமது சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ள நிலையில், இந்தத் தொழிற்சாலையின் பணிகளை முற்று முழுதாக இலங்கையின் தொழில்நுட்பவியலாளர்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் தலைமைப் பதவி வகித்த சதாசிவம் துரைராஜ், 2021 ஜனவர் 31ஆம் திகதியுடன் தமது இரண்டு வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்துள்ளதாகவும், இந்தியாவின் Mahindra & Mahindra நியமங்களின் பிரகாரம் உற்பத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு, இலங்கையின் தொழில்நுட்பவியலாளர்கள் அறிவையும் திறனையும் பெற்றுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில், “MILPL ஐச் சேர்ந்த இலங்கையில் கார் பொருத்துகையில் ஈடுபடும் தொழில்நுட்பவியலாளர்கள் தமது பணிகளை சிறப்பாக முன்னெடுக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளனர். குறிப்பாக சர்வதேச நியமங்களின் பிரகாரம் சீராக்கங்களை மேற்கொள்ளல், பொருத்திய வாகனத்தின் வினைத்திறனை உறுதி செய்வதற்கான இனங்காணல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் அறிவையும் பெற்றுள்ளனர்.' என்றார்.
'தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் அறிவைப் பெற்றவர்களாக பொருத்துகை தொழில்நுட்பவியலாளர்கள் திகழ வேண்டும் என்பதுடன், உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக வடிவமைப்புகளை ஆராயும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இலங்கையின் தொழில்நுட்பவியலாளர்கள் எவ்வித மேற்பார்வையுமின்றி, பொருத்துகை பணிகளை முன்னெடுப்பதற்கான அனைத்து ஆளுமைகளையும் பெற்றுள்ளனர்.' என்றார்.
'சுமார் 50 தொழில்நுட்பவியலாளர்களை நான் பயிற்றுவித்துள்ளதுடன், இவர்கள் மத்தியில் தரம் வாய்ந்த உற்பத்தியை தயாரிப்பதற்கான ஆற்றல் இயற்கையாகவே காணப்படுகின்றது. எனது பணியை இவர்கள் இலகுவாக்கியிருந்ததுடன், மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்தனர். முதலில் நான் இவர்களை நேர்காணலுக்குட்படுத்திய போது, அடிப்படை வினாக்களை கேட்பதற்கு நான் திட்டமிட்டிருந்தேன், ஆனாலும் கார் உதிரிப்பாகங்கள், வாகன கட்டமைப்புகள், காரணிகள் போன்ற சிக்கல்கள் நிறைந்த வினாக்களுக்கும் அவர்களால் இலகுவாக பதிலளிக்க முடிந்தது. இலங்கையில் முதல் நாளிலிருந்து உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்யும் திறன் இவர்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையை எனக்கு வழங்கியிருந்தது. நியமப்படுத்தல், தொழிற்சாலை பாதுகாப்பு, பணியிட ஒழுக்கவிதிமுறைகள் போன்ற விடயங்களில் அதிகளவு பயிற்சி தேவைப்பட்டதை நான் அவதானித்தேன். காலப்போக்கில் அவர்கள் துரிதமாக விடயங்களை பயின்றதுடன், நியமங்கள் மற்றும் குறிப்புகளை பின்பற்றியிருந்தனர். அவர்கள் சிறந்த பயிலுநர்கள் மற்றும் பின்பற்றுநர்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியும்.' என்றார்.
இலங்கையின் தொழில்நுட்ப ஊழியர்களின் பிரத்தியேக ஆளுமைகள் தொடர்பில் சதாசிவம் குறிப்பிடுகையில், 'இவர்கள் பெருமளவு சுய ஒழுக்கமிக்கவர்களாக இருந்தனர். அதிகளவு கவனம் செலுத்தியமை, பிரச்சனைகளை தீரக்கும் ஆற்றல், தொழில்நுட்பத்துக்கான தீவிர ஈடுபாடு மற்றும் இறுதித் தயாரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தல் போன்றவற்றில் நாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.' என்றார்.
“Mahindra வாகனங்கள் அதிகளவு தங்கியிருக்கும் திறன் படைத்தனவாக அமைந்துள்ளன. இந்தியாவில் நாம் Scorpio நிறுவனம் அல்லது Bolero நிறுவனம் என அழைக்கின்றோம், ஏனெனில் அந்தத் தயாரிப்புகளுக்காக இந்நிறுவனம் புகழ்பெற்றுள்ளது.
பொருத்துகை நிலையத்தின் உற்பத்திக் கொள்ளளவு பற்றிக் குறிப்பிடுகையில், 'வருடாந்தம் 5000 அலகுகளை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தற்போது மாதாந்தம் நாம் 100க்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்கின்றோம். சந்தையில் கேள்வி அதிகரிப்புடன், எம்மால் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். தற்போது KUV100 Manual Petrol ரக கார்களை உற்பத்தி செய்துள்ளோம். எதிர்காலத்தில் KUV100 AMT Diesel ரகத்தையும் உள்வாங்க திட்டமிட்டுள்ளோம்.' என்றார்.
இந்தியாவில் அடுத்த மாதம் மற்றுமொரு வாகன உற்பத்தி நிறுவனமொன்றில் சவால்கள் நிறைந்த பணியில் சதாசிவம் இணைந்து கொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
6 hours ago