S.Sekar / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு நாணயங்களை தம் கைவசம் வைத்துள்ள நபர்களை அவற்றை வைப்புச் செய்து வெளிநாட்டு நாணய கணக்கை வங்கியில் ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அழைப்புவிடுத்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றிய சம்பளக் கொடுப்பனவு, பொருட்கள் அல்லது சேவைகளுக்கான கொடுப்பனவுகள், வெளிநாட்டு கணக்கில் வைத்திருந்து மீளப் பெற்ற பணம் அல்லது வெளிநாட்டுக்கு விஜயம் செய்ய வங்கியொன்றிலிருந்து பெற்றுக் கொண்ட போதிலும், அந்தப் பயணம் மேற்கொள்ளாமை போன்ற காரணிகளால் தம் வசம் சுமார் 15000 அமெரிக்க டொலர்களுக்கு நிகரான வெளிநாட்டு பணத்தை இலங்கை குடிமக்கள் கொண்டிருக்கலாம்.
அவ்வாறானவர்கள் வெளிநாட்டு நாணய கணக்கை ஆரம்பித்து, அதற்கு வட்டியை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், வெளிநாட்டு பிரயாணம் அல்லது அனுமதியளிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு நாணயக் கணக்கை வைத்திருப்போர், அந்தக் கணக்கில் தாம் வைத்திருக்கும் வெளிநாட்டுப் பணத்தை வைப்புச் செய்ய முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
4 minute ago
15 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
42 minute ago