Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கினால் பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மொபைல் சேவை வழங்கல் நிறுவனமான Hutch, பாதிக்கப்பட்ட அனைத்து பிராந்தியங்களிலுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத்தையும், ஆதரவையும் வழங்கி, அவசர நிலைமைக்கு தனது பங்களிப்பை ஆற்றியிருந்தது.
வெள்ளப்பெருக்கினால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்த அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தினசரி ரூ. 10 பெறுமதியான உரையாடல் நேர அடிப்படையில் ஐந்து தினங்களுக்கு இலவசமாக வழங்கியிருந்தது.
நெருக்கடி நிறைந்த அத்தருணத்தில் அவர்கள் அவசர சேவைகள், முக்கியமான பயன்பாடுகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எந்நேரமும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதனை இது உறுதி செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025