2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெள்ளவத்தையில் செலிங்கோ லைஃவ் இன் பெரிய கிளை

Editorial   / 2018 ஜூலை 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ் அதன் மிகப் பெரிய கிளையை அண்மையில் வெள்ளவத்தையில் திறந்து வைத்துள்ளது. கொழும்பு தெற்கு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வேவையை வழங்கும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

இலக்கம் 43 - 45 காலி வீதி கொழும்பு -06 என்ற முகவரியில் இந்தக் கிளை அமைந்துள்ளது. இது 12,675 சதுர அடி பரப்பைக் கொண்டது. ஒரே நேரத்தில் 65 பேர் அமர்ந்து பயிற்சி பெறக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. வெள்ளவத்தைப் பிரதேசத்தை உள்ளடக்கிய நான்கு கிளைகள் இந்தப் புதிய கட்டடத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  

வலுச்சேமிப்பு வளம் கொண்ட ஒளி அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கான வாகனத் தரிப்பிட வசதிகள் என்பனவும் இங்குள்ளன.  

“கடந்த 14 ஆண்டுகளாக வெள்ளவத்தைப் பிரதேசத்தில் எமது செயற்பாடுகள் காத்திரமாக அமைந்துள்ளன. அதற்கேற்றவாறு அர்ப்பணிப்புடன் கூடிய கிளைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கிளையை அங்கு ஆரம்பிப்பதற்கான நோக்கமும் அதுவேயாகும். இந்தக் கட்டடத்தைப் பெற்றுக் கொண்டமையானது எமது 30 வருட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்” என்று செலிங்கோ லைஃவ் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் கூறினார்.   

செலிங்கோ லைஃவ் அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, களுத்துறை, குருணாகல், கம்பஹா, காலி, மாத்தறை, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை, கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தனது சொந்தக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.

இவற்றுள் பல சூரிய சக்தி கட்டடங்களாக மாற்றப்பட்டும் உள்ளன. செலிங்கோ லைஃவ் நிலைபேறு சக்தி மாதிரி வடிவமைப்பைக் கொண்ட கிளைக் கட்டடங்கள் ஹொரணை, பாணந்துறை, வென்னப்புவ, பண்டாரவளை, சிலாபம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .