Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்பிகோ, ஹார்ட்வெயார் துறையைச் சேர்ந்த தனது சிறந்த விற்பனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு, வாத்துவ ப்ளு வோட்டர் ஹோட்டலில் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக இடம்பெற்றது.
நிறுவனத்தின் சிறந்த விற்பனை மற்றும் சேகரிப்புகளில் உயர் பங்களிப்பு வழங்கியிருந்த விற்பனை விநியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில், விற்பனை விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆர்பிகோ உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக துறைசார்ந்த (LMD) நிகழ்வுகளில் முக்கிய அங்கத்தை வகிக்கின்றது. இந்த நிகழ்வில் 100க்கும் அதிகமான ஹார்ட்வெயார் விநியோகத்தர்கள் உள்ளடங்கியிருந்ததுடன், 2017/2018 காலப்பகுதியில் நிறுவனத்தின் உயர் விற்பனை இலக்குகளை எய்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தாருக்கும் பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள் மற்றும் சுற்றுலாப் பயண வாய்ப்புகள் போன்றன பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்தன.
ஆர்பிகோ விநியோக வலையமைப்பின் சிறந்த செயற்பாடுகள் தொடர்பில் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக துறை பதில் பொது முகாமையாளர் துமிந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் பாரியளவிலான வாடிக்கையாளர்களுக்கு எமது உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை கொண்டு செல்வதில் ஆர்பிகோ விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் எமது விநியோக வலையமைப்பை தக்க வைத்துக் கொள்வதுடன், விரிவாக்குவது எமது இலக்காக அமைந்துள்ளது. இதற்காக நிறுவனத்துக்கும் விநியோகத்தர்களுக்குமிடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக துறை சந்தைப்படுத்தல் மற்றுமு; வியாபார அபிவிருத்தி தலைமை அதிகாரி தில்ஷான் அபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “அவர்களின் பெறுமதி வாய்ந்த உதவி மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளின்றி எம்மால் கடந்த காலங்களில் உயர் வளர்ச்சியை பதிவு செய்திருக்க முடியாது. எமது வர்த்தகநாம உறுதி மொழியை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் காலங்களிலும் இதே அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .