2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முகம், அண்ணப்பிளவு சீரமைப்பு பிரிவின் 2ஆம் ஆண்டு பூர்த்தி

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பொது வைத்தியசாலையில் இயங்கிவரும் உதடு, அண்ணப்பிளவு, முகசீரமைப்புக்கான பிராந்திய மத்திய சிகிச்சை நிலையத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வுகள், வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று(24) நடைபெற்றன.

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே. அகிலேந்திரன் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.

இப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் ரஞ்சன் மல்லவராச்சி கருத்து தெரிவிக்கையில்,

இரண்டு வருடத்தில் 150 நோயாளர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன் 50 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது.

முகம்,உதடு, தாடை, அண்ணப்பிளவு சத்திரசிகிச்சைக்கான நிலையமாக மட்டுமல்லாது வாய்புபுற்றுநோய்க்கான பிராந்திய சிகிச்சை நிலையமாகவும் செயற்;பட்டுவருகிறது.

அத்துடன் இந்நிலையமானது தலை, கழுத்து சம்பந்தமான சத்திர சிகிச்சைக்கான ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான பிராந்திய நிலையமாகவும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு நிலையமாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான பயிற்சி மையமாகவும் செயற்ப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் மற்றும் வைத்தியர் திருமதி யூட் ஆகியோர் கலந்துகொண்டனர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .