2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மாணவியின் மனு: 15 ஆம் திகதி தீர்ப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

பல்வைத்திய பட்டப்படிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட மாணவியால் தாக்கல் செய்யப்பட்ட ஆணை கோரும் மனு மீதான தீர்ப்பு; அக்டோபர் 15 திகதி வழங்கப்படும் என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அறிவித்தது.

தனக்கு பல்கலைக்கழகத்தில் கிடைக்க வேண்டிய இடத்தை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியதாக மனுதாரர் முறையிட்டுள்ளார்.

மனுதாரர் அனுஜா யோகநாதன் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதன் மேலதிக செயளாளர் கலாநிதி பிரியங்க பிரேமகுமார மற்றும் பல்கலைகழக அனுமதிபெற்ற பரிட்சார்த்தி வி.ஜயவதனி ஆகியோரை பிரதிவாதிகளாக காட்டியுள்ளார்.

கௌரிசங்கரி தவராசாவினால் நெறிப்படுத்தப்பட்டும் சட்டத்தரணி றியாட் அமீக் மனுதாரர் சார்பில் தோன்றினார்.

முல்லைத்தீவு நகரம் அரச கட்டுப்பாட்டில் வந்தபோது தான் 1989 ஆம் ஆண்டு அங்கு பிறந்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X