2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மழையால் வவுனியாவில் 15 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில்  புதன்கிழமை  (26) பெய்த மழை காரணமாக 15 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் 14 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் புளியங்குளத்தில் ஒரு குடும்பமும் இடம்பெயர்ந்துள்ளன.

மேலும், வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் கலாபோகஸ்வௌ; கிராமத்திலும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் மழையின் காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை செட்டிகுளம், வேப்பங்குளம் உடைப்பெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவின் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளதுடன், பிரதான போக்குவரத்து மார்க்கங்களிலும் நீர் தேங்கி நிற்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

இதன் காரணமாக மக்களது இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .