2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நவரத்தினம்

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் 150 ஆண்டு நினைவு கொண்டாடின.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளினை தொடர்ந்து விவேகானந்தரின் திருவுருவப்படம் வீதியுலாவாக எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரத்தில் அமைந்துள்ள விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததன் பின்னர் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நா.சேனாதிராசா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து இறைவணக்கத்தை இறை பணிச்செம்மல் வை. தேவராசா வழங்கினார்.

வரவேற்புரையினை க.ஐயம்பிள்ளை நிகழ்த்தியதுடன் 'வீர இளைஞர்களுக்கு விவேகானந்தர்' என்ற தலைப்பில் புளியங்குளம் இந்து கல்லூரி ஆசிரியர் பா.பாலசுந்தரமும் 'இந்து பெண் மணிகள்' என்ற தலைப்பில் செம்மொழிச்செல்வி பண்டிதை யோகா சோமசுந்தரமும் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற தலைப்பில் ஆசிரியர் சி.வரதராஜனும் 'மத மாற்றம் என்ற தலைப்பில்' இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரனும் 'இந்து சமுதாய ஒற்றுமை' என்ற தலைப்பில் கலாநிதி தமிழ்மணி அகளங்கனும் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X