2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சௌத்பார் கிராமத்திலிருந்து 62 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளமையினாலும் கடல்நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளமையால் அந்த கிராமத்தைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 234பேர் இடம்பெயர்ந்து  சௌத்பார் பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு மற்றும் இன்று வியாழக்கிழமை காலை வரை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, அந்த கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சௌத்பார் கிராம அலுவலகர் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தில் 105 குடும்;பங்களைச் சேர்ந்த 515 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் 62 குடும்பங்களே பாதிக்கப்பட்டு சௌத்பார் பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்த குமார், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க மன்னார் பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .