2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 1,300 தற்காலிக வீடுகள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு சோவா நிறுவனத்தினால் 1,300 தற்காலிக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சோவா நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் இராசநாயகம் றொணி தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் புதுக்குடியிருப்பில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை சோவா நிறுவனம் முன்னெடுத்து வருகின்றன.

இதுவரை 7 கிராம அலுவலர் பிரிவுகளில் 1300 வீடுகளும், 910 குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்;பட்டுள்ளன. அத்துடன், இப்பிரதேசங்களில் மேலதிகமாக 80 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 அங்கத்தவர்கள் கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் 350 மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரையிலும் 168 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X