2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு: 150 வள்ளங்கள் மூழ்கின

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான பிரதேசங்களின் கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட மீனவ வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு  மூழ்கியுள்ளன.
வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதி இன்று சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் 12.05 வரையில் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இந்தக் கடற்கொந்தளிப்பினால் வடமராட்சி கரையோரங்களினை அண்டிய மீனவர்களின் 100 இற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதுடன், பல வள்ளங்கள் சேதமடைந்து, மீன்பிடி வலைகளும் கடலுடன் காணமற் போயுள்ளதாகவும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாஜம் தெரிவித்தது.

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பரப்பிலும் நிலவிய இந்த கடற்கொந்தளிப்பினால் 25 வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதுடன், 50 இற்கு மேற்பட்ட வள்ளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வடமாகாண கடற்றொழில் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் எஸ்.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X