2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 24 பேர் சரீரப்பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட  24 பேரையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம்  சரீரப்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

மேற்படி 24 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர் மேற்படி 24 பேரையும் சரீரப்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

இதன்போது ஒவ்வெருவரும் 10,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்ட அடம்பன்,  இத்திக்கண்டல் கிராமத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 24 பேரையும்  நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விடத்தல்தீவு பொலிஸார் கைதுசெய்தனர்.

அடம்பன், இத்திக்கண்டல் கிராமத்தில் விடத்தல்தீவு பொலிஸாரும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் இணைந்து  மேற்கொண்ட சோதனையின்போதே சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்  மேற்படி 24 பேரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X