2025 ஜூலை 14, திங்கட்கிழமை

30 பேருக்கு சுயதொழில் உதவி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  யுனிசெவ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 பேருக்கு தலா 36,000  ரூபாய் பெறுமதியான   சுயதொழில் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகங்களிலுமிருந்து தலா 05 பேர் வரை தெரிவுசெய்து, அவர்களுக்கு இந்த சுயதொழில் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

பாடசாலை செல்லும் மாணவர்களை கொண்ட வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், விவசாயம், மீன்பிடி, சிறுவியாபாரம் போன்ற சுயதொழில் நடவடிக்கைகளை பயனாளிகள் மேற்கொள்ளமுடியும்.

பிரதேச செயலாளர்களின் வழிகாட்டல்கள் மூலம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகஸ்தர்கள் பயனாளிகளை தெரிவுசெய்து, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து, தற்போது பயனாளிகளுக்கான காசோலைகள் எழுதப்பட்டுள்ளதுடன், அவை எதிர்வரும் வாரத்தில் பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.
வடமாகாணத்தில் 2012ஆம் ஆண்டு முதல் இந்த சுயதொழில் உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு 243 பயனாளிகளுக்கும் 2013ஆம் ஆண்டு 183 பயனாளிகளுக்கும் வடமாகாணத்தில் சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .