2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி; 4 இராணுவ வீரர்கள் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் பாப்பமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவச் சிப்பாய்  ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 4 இராணுவச் சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளதாக விடத்தல்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இராணுவத்தினரை  ஏற்றிக்கொண்டு வந்த  கப் ரக வாகனமே   விபத்துக்குள்ளானது.

இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு  மேற்படி கப் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. இதன்போது மாடு ஒன்று வீதியின்; குறுக்காகப் பாய்ந்தபோது வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தபோது  வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை விடத்தல்தீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X