2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மழையால் வவுனியாவில் 414 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக 414 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், மூன்று தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

இம்மழையால் பாதிப்படைந்த மக்களை தங்கவைப்பதற்காக விளக்குவைத்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம், கலாபோகஸ்வௌ ஆகிய பகுதிகளில் மூன்று தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக செட்டிகுளம் பகுதியில் 17 குடும்பங்களும் வவுனியா வடக்கில் ஒரு குடும்பமும் வவுனியாவில் 396 குடும்பமுமாக 414 குடும்பங்களைச் சேர்ந்த 1446 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, செட்டிகுளம் பகுதியில் உள்ள வேப்பங்குளம் உடைப்பெடுத்துள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். இந்த  நிலையில், வவுனியாவில் பாரிய குளங்களில் ஒன்றான வவுனியா குளம் வான் பாய்ந்து வருவதனால் பூந்தோட்டம் ஊடாக மகா இறம்பைக்குளம், ஸ்ரீநாகர், அண்ணாநகர் உட்பட சில கிராமங்களுக்கான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மதிலும் மழை காரணமாக விழுந்துள்ளது. வவுனியாவின் சிறிநகர், பூந்தோட்டம், திருநாவற்குளம் பகுதிகளிலும்  வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .