2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ரூ. 50 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்

மன்னார், தாழ்வுபாட்டு கிராமத்தில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வத்தளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட 37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .