2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மழையால் வவுனியாவில் 557 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுகந்தினி

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 557 குடும்பங்களைச் சேர்ந்த 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக   வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மழை காரணமாக 76  குடும்பங்களைச் சேர்ந்த 262 பேர்  இடம்பெயர்ந்த நிலையில்,  புதியவேலர்சின்னக்குளம் மற்றும் சமணங்குளம்  பொதுநோக்கு மண்டபங்களிலும்  விளக்குவைத்தகுளத்தில் முன்பள்ளியிலும்; இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மகிழங்குளத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 173 பேரும் விளக்குவைத்தகுளத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேரும் சமணங்குளத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 456 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஒரு குடும்பம் வவுனியா தெற்கு  பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 46 குடும்பங்களும் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 14 குடும்பங்களும் புதன்கிழமை (26) பாதிக்கப்பட்டுள்ளன.  

மேலும், செட்டிகுளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில் 17 மண் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. வவுனியா வடக்கு மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில் 357 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .