2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முள்ளிக்குளத்தில் 82 தற்காலிக வீடுகள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறி, எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காட்டுப்பகுதியினுள் வாழ்ந்து வரும் மக்களுக்காக அவசர தற்காலிக வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வடமாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனின் முயற்சியினால் முள்ளிக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் 82 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்றகொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முள்ளிக்குளம் கிராமத்தில் இடம்பெற்றது.

இந்த தற்காலிக வீடுகள் தலா 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முத்தலிப் பாபா பாறுக், வட மாகாண சபை அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர், மன்னார்; குருமுதல்வர் அன்டனி விக்டர் சோசை ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .