Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனம் தற்போது பாரிய அளவில் அபிவிருத்தியடைந்து வருகின்றது. சுமார் 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையினை செலவீனம் செய்து பாரிய உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் உப்பளம் தனியாருக்கு அல்லது வெளிநாட்டவர்களுக்கு கைமற்றப்படுவதை மீனவ சமூகமாகிய நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தில் வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
'10 இலட்சம் ரூபாய் பெறுமதியான உப்பிற்கு அயடின் கலக்கின்ற இயந்திரத்தை மன்னார் மாவட்ட மீனவ சமாசம் மன்னார் உப்பளத்தில் பொருத்தி இருந்தது.
மன்னார் மாவட்ட மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டே அன்றைய அரச அதிபரினால் மன்னார் மாவட்ட உப்பளம், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதன் போது, குறித்த நிர்வாகம் சரியான முறையில் தமது உற்பத்திகளையும்,சேவைகளையும் முன்னனெடுத்த நிலையில் அரசுக்கு கைமாற்றப்பட்டது. தற்போது மன்னார் உப்பளம் தொடர்பாக நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
கடந்த வருடம் உப்பின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மூடை சுமார் 1,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த உப்பளம் வரவு – செலவுத் திட்டத்தில் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.
தனியாருக்கு உப்பளத்தை விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மன்னார் மாவட்ட மீனவ சமூகமாகிய நாங்கள், வன்;மையான கண்டணத்தை தெரிவித்துக்கொள்ளுவதோடு, மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எனவே, மன்னார் உப்பளம் தனியாருக்கு அல்லது ஏனைய வெளிநாடுகளுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உப்பளத்தின் வளர்ச்சியில் பங்களிகளாக இருந்தோம் என்ற வகையில், மாவட்ட மீனவர்களின் தேவைகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே, உப்பளம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கே சொந்தமானதாக உள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். எதிர்காலத்தில் உப்பளம் கைமாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
19 minute ago