Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வருமானம் தரக்கூடிய பயிர்ச் செய்கைகளில் ஒன்றாகக் காணப்படும் மரமுந்திரிகை செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி ஆகிய பகுதிகளில் இதனை ஊக்குவிக்கும் வகையில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் மர முந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் செய்கைக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு மானிய அடிப்படையில் மரமுந்திரிகை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதிகூடிய வருமானம் தரக்கூடியதும் போட்டித் தன்மையில்லாத ஒரு பயிர் செய்கையாகவும் காணப்படுகின்றது. இதனால், இதனை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
51 minute ago