Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும் போக்காளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அமைச்சர் ரிஷாட் பதியுதின் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்' என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதினின் ஊடகப்பிரிவு, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மன்னாருக்கு விஜயம் செய்த நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் அதிகாரிகளுக்கிடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான எந்தக் காணியிலும், துளியளவிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதை, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா முன்னிலையில் மிகவும் உறுதியுடன் கூறுகின்றேன். பிழையான குடியேற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய்' என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 'மன்னார் மாவட்டத்தில் உள்ள வன ஜீவராசிகளின் நிலங்களைப் பாதுகாத்தல், மன்னார் மாவட்டக் கிராமங்கள், பாதைகள் ஆகியவை அண்மையில் வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டமை, மற்றும் வங்காலை கிராமத்தின் ஒரு பகுதி பறவைகள் சரணாலயத்துக்கு உரித்துடையது என பிரகடனம் செய்யப்பட்டமை ஆகியவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன' என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
16 minute ago