Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானைகள் இடம்பெயரும் பாதைகளில், ரயில் தண்டவாளங்கள் குறுக்கிடுகின்றன. இப்பகுதிகளூடாக, ரயில்கள் மணித்தியாலத்துக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளபோதும், இந்த வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காததாலேயே யானைகள் அநியாயமாக உயிரிழக்கின்றன என, வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கூறினார்.
தலை மன்னார் - மதவாச்சி ரயில் பாதையில், மெனிக்பாம் அருகே, செவ்வாய்க்கிழமை (16) இரவு, ரயிலுடன் மோதி நான்கு யானைகள் உயிரிழந்தன.
சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ரயில்வே திணைக்கள அதிகாரிகள், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் இவ்விபத்துப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.
இதன்பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் இதுபற்றித் தெரிவிக்கையில்,
யானைகள் வாழுகின்ற காடுகள் இன்று காடழிப்பாலும், ரயில் பாதைகளாலும் பெருந்தெருக்களாலும் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன.
யானையொன்றுக்குத் தினமும் 100 லீற்றர் தண்ணீரும் 150 கிலோகிராம் எடையுள்ள இலை, தழைகளும் தேவைப்படுகின்றன. இவ்வளவு தண்ணீரையும் தீனியையும் ஒரு சிறிய காட்டுத்துண்டில் இருந்து பெறமுடியாது. இதனால்தான் யானைகள் அடுத்த காட்டுத்துண்டை நோக்கி இடம்பெயருகின்றன.
யானைகள் ஒருபோதும் வழித்தடங்களை மாற்றுவதில்லை. இதனால்தான் ஒரு காட்டுத்துண்டில் இருந்து இன்னொரு காட்டுத்துண்டுக்கு யானைகள் இடம்பெயரும் கடவைப்பாதையில் ரயில்த் தண்டவாளங்களோ, தெருக்களோ குறுக்கிட்டால் அப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் குறித்த எச்சரிக்கைகள் செய்யப்படுகின்றன. இக்கடவைப் பாதைகளில் ரயில்கள் மணித்தியாலத்துக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் உள்ளது. ஆனால், ரயில்கள் இந்த வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காததாலேயே யானைகள் அநியாயமாக உயிர் இழக்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடக்கில் ரயில் மோதியதில் 12 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆசிய யானைகளில், இலங்கையில் உள்ளவை தனித்துவமானதோர் உப இனம். ஒரு காலத்தில் 20,000 வரை இருந்த இவை இப்போது ஐயாயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருப்பதால் அழியும் உயிரினங்களின் பட்டியலில் இலங்கை யானைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும், ரயில் விபத்துக்களால், யானைகள் மரணமடைவதைத் தடுப்பதற்கு கடவைப்பாதைகளில் ரயில்கள் வேகத்தைத் தணிக்க ரயில்வே திணைக்களம் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
38 minute ago