2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'சிங்களவர்களை சிறுபான்மையினராக்க முயற்சி': மஹிந்த குற்றச்சாட்டு

George   / 2016 நவம்பர் 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முல்லைத்தீவு மணலாறு மயிலன்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு இன்று காலையில் விஜயம் செய்தார்.

அங்கு இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மஹிந்த, “சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது” என்று  தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள சிங்கள மக்களாகிய நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்து தமிழர்களின் இராச்சியமாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

“இலங்கை சிறிய நாடு, அதில் அதிகாரங்களை பிரித்துக் கேட்கின்றனர். அவ்வாறு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா , அமெரிக்கா போன்று இந்த நாடு பெரியது இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .