Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் இருந்து மணல், தொடர்ச்சியாக வெளியிடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுவதால் கௌதாரிமுனை பாடசாலையின் கட்டடப் பணிகளுக்கு மன்னாரின் பாலியாற்றில் இருந்து மணல் எடுத்து வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது' என கௌதாரிமுனை மக்கள் பிரதிநிதிகள்; தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயத்தினை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பூநகரியின் பல பகுதிகளிலிருந்து மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் மணல் கொண்டு செல்பவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
'பூநகரி நகரத்தின் ஊடாக தினம் 20க்கும் மேற்பட்ட டிப்பர்களில் யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு செல்லப்படும் நிலையில், பூநகரிப் பொலிஸார், மணல் கொண்டு செல்பவர்களை கைது செய்வதில்லை' என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தாலும், பொலிஸ் நிலையத்திலிருந்தே மணல் ஏற்றுபவர்களை தப்பிச் செல்லுமாறு தகவல் வழங்கப்படுவதாகவும் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகள் மேலும் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுக்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உயரதிகாரி, எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago
48 minute ago