2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி 4 யானைகள் பலி

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொழும்பு - தலைமன்னார் அதிவிரைவு (எக்ஸ்பிரஸ்) ரயிலில் மோதி 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.

தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(16) இரவு கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இவை மோதியுள்ளன.

தலைமன்னாரில் இருந்து இரவு 10.30 மணியளவில் புறப்பட்ட ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் ரயில் பாதையில் கூட்டமாக நின்ற யானைளுடன் மோதியுள்ளது.

ரயில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட யானைக் குட்டி உட்பட நான்கு யானைகள் அங்கேயே பலியாகியுள்ளன.

இந்த விபத்து காரணமாக ரயில் பாதை சிறிதளவு சேதமடைந்ததுடன் யானைக் குட்டிகளின் உடலை அங்கிருந்து அகற்றும்வரை ரயில் தாமதித்து பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .