Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்து தங்கியிருப்பவர்களாலேயே அதிகமாக பால்நிலை வன்முறைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பால்நிலை வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் அநேகமானோர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியிருப்போர்களால் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வெளிமாவட்டங்களிலிருந்து தொழில் நிமித்தம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்து தங்கியிருப்பவர்களாலேயே அநேகமான பால்நிலை வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அதிகாரிகளாலும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்து இவ்வாறான குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிச்செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு வருகைதந்து தங்கியிருப்பவர்கள் தற்காலிக பதிவுகளை கிராம அலுவலர்களிடம் மேற்கொண்டு வசிக்கமுடியும் எனவும் இதுவிடயத்தில் பெண்கள் தனிப்பட்ட சுய விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் சிறந்தது எனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் அது சார்ந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
21 minute ago