2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

1 வருடமாக தீர்வின்றி தொடரும் போராட்டம்

எஸ்.என். நிபோஜன்   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வுகளும் இன்றி 1 வருடமாக தொடர்கின்றது.

யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் உறவுகளுக்கு நீதிகோரி வடக்கு ,கிழக்கில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் (19) 365 ஆவது நாளாக தீர்வின்றி இரவு பகலாக தொடர்கிறது.

‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை’ என ஜனாதிபதியும், பிரதமரும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.   

இதேவேளை, ‘இனிவரும் நாட்களில் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக’ கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X