2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

10 வருடங்களாக அவதியுறும் பல்லவரான்கட்டு சோலை மக்கள்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பல்லவராயன்கட்டு சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மீள்குடியோறி சுமார் 10  வருடங்கள் கடந்தும், இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்துவருவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், எமது விடயத்தில், அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பாராமுகமாகச் செயற்படுவதாகவும் கூறினர்.

அதாவது, குறித்த மக்களுக்கான ஒழுங்கான போக்குவரத்து வசதிகள், சுகாதர வசதிகள் அரசங்கத்தால் செய்து தரப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அக்கபுதி மக்கள்,  அப்பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 5 வரை மாத்திரமே காப்படுவதாகவும் கூறினர்.

5ஆம் தரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் 10 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரம் காட்டு பாதைகளால் பயணித்தே, பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுவான  வசதிகளையாவது செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .