2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

12 கிலோ தங்கம் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 2 சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் இருந்தும் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான 12 கிலோ கிராம் நிறையுடைய 120 தங்க பிஸ்கட் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைனர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X