Shanmugan Murugavel / 2022 ஜனவரி 31 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்

13ஆவது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஶ்ரீதரன் இவ்வாறு தெரிவித்தார்.
ஶ்ரீதரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“13ஆவது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் அதில் இருக்கின்றது.
மேலும் அதிலே தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அத்தோடு இது தொடர்பாக எங்களது கூட்டத்தில் ஆராய்ந்திருந்தோம். இந்தியாவிடம் நாங்கள் 13ஐ பற்றி கேட்கத் தேவையில்லை.
ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலின் போது ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே ஜெயலலிதாவால் சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வளவு நடந்த பின்பும் நாங்கள் அதை கேட்பது காலத்திற்கு பொருத்தமானதா என்று எனக்கு தோன்றவில்லை” எனக் கூறினார்.
19 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago
26 minute ago