2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

154 இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில்

Freelancer   / 2022 நவம்பர் 03 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

பருவப்பெயற்சி மழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை   எதிர்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின்  அனர்த்த முகாமைத்துவ உதவி  பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வர குமார் தெரிவித்துள்ளார்

துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற பருவப்பெயற்சி மழை காரணமாக நேரிடும் இடர்பாடுகளை எவ்வாறு  எதிர்கொள்ளவேண்டும்  என்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 35 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் , மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இயற்கை அனர்த்தம் ஒன்று  ஏற்படும் நிலையில் மக்களை  பாதுகாப்பாக கொண்டுவந்து தங்க வைக்கின்ற அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .