Freelancer / 2022 நவம்பர் 18 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கொக்கிளாய், கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெற்றோரின் கோரிக்கை அடிப்படையில் குழந்தையை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்த்தனர்.
எனினும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து உடனடியாக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தையின் தந்தை ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குழந்தை வீட்டிலிருந்து போதைப் பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. R
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago