2025 ஜூலை 14, திங்கட்கிழமை

200 விவசாயிகளுக்கு விதை தானியங்கள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்திலுள்ள 200 விவசாயிகளுக்கு 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான விதை தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நிதியுதவியில் இந்த விதை தானியங்கள் கடந்த 23 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன.

விதை தானியமாக நிலக்கடலை, உழுந்து, பயறு, நெல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பயிரிடும் நடவடிக்கைகள் விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக தானிய செய்கைகள் அழிவடைந்தன.

இதனால், விவசாயிகளால் விதை தானியங்களை பெறமுடியாத சூழ்நிலையேற்பட்டது. இந்நிலையில், தற்போது விதை தானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .