2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முசலி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்காலை பகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டவர நடிவக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு தேவையான உணவுகளை நாளை வங்காலை பகுதியிலிருந்து படகு மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததையடுத்து அகத்தி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் இப்பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. முருங்கன் சிலாவத்துறை பாதை, வங்காலை-அறிப்புத் துறை பாதை, புத்தளம் –மரிச்சுக்கட்டடிப் பாதை என்பனவற்றின் போக்குவரத்துக்கள் வெள்ள நீர் பாதையினை ஊடறுத்து செல்வதால் முழுமையாக தடைபட்டுள்ளது.

இதேவேளை முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கையிறுப்பில் உள்ள உணவு பொருட்களே சில தினங்கள் பயன்படுததப்பட்;டன.

பாதிப்புக்குள்ளான மக்களை தங்கவைப்பதற்கு போதுமான கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பள்ளிவாசல் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வைத்திய தேவைகளின் நிமித்தம் இருவர் கடற்படையினரின் படகுககள் மூலம் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர என்றார்.

மேலதிக உணவு பொருட்களை மன்னாரிலிருந்தே கொண்டுவர வேண்டியுள்ளது என முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான் கூறினார்.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவ்வப்போது தங்களுடன் தொடர்பு கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்கி வருவதாக பிரதேச செயலாளர், முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான், பிரதி தலைவர் மௌலவி பைரூஸ் ஆகியோர் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X