2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மன்னாரிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவைகள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நேற்று சனிக்கிழமை மதிய வேளையிலிருந்து சுமுகமாக இடம்பெற்றுவருகின்றபோதிலும், அரசாங்க போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான  அரசாங்க போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இ.போ.சபையின் மன்னார் சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

மன்னார் தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்துச் சேவைகளை மட்டுமே அரசாங்க போக்குவரத்துக்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன், வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்துக்களும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தின் தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X