2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய பாடநெறி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நவரத்தினம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பை அடிப்படையாக்கொண்டு குழாய் பொருத்துனர் (பிளம்பர்) பயிற்சிநெறியினை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் வை.சத்தியநாதன் தெரிவித்தார்.

தொழில்நுட்பக்கல்லூரி பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளரின் அறிவித்தலுக்கமைய இப்பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய தொழில் தகமை 3 சான்றிதழுக்கான 6 மாத பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர் வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியில் விரைவில் விண்ணப்ப படிவங்களை பெற்று சனிக்கிழமைக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X