2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை இனங்காணும் நடவடிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியாவில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களும் சுகாதாரத் தொண்டர்களும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

150 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களும் சுகாதாரத் தொண்டர்களும் வவுனியாவிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்;காணும் நடவடிக்கையில் நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணியின் மூலமாக பல  இடங்களில் நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்பான இடங்கள் இனங்காணப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, நுளம்பு பெருகும் இடங்களை வைத்துள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X