2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வன்னியில் சுகாதாரப் பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வன்னியில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அங்கு சுகாதார பாதிப்புக்கள் ஏற்படாதவாறும் தொற்றுநோய்கள் பரவாதிருக்கக் கூடியதுமான சுகாதாரப் பணிகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலளாருக்கே இவ்வாறு பணித்துள்ளார்.

வெள்ளம் குறைவடைந்தபோதிலும், தற்போது மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நோய் பரவும் அபாயமிருப்பதாக தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவில் டெங்கு பரவுவதை தடுப்பதிலும்  கவனம் செலுத்துமாறும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இம்மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சுகாதாரம் பற்றிய உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பாடசாலை மாணவர்களுக்கு இது குறித்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நகர மற்றும் பிரதேசசபைகளின் எல்லைக்குள் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறித்து கவனம் செலுத்தி அவற்றை வழிந்தோடச் செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் நகர, பிரதேசசபைகளின் தலைவர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X