2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கழிவுகளை கொட்டுவதற்கு இடப்பற்றாக்குறை- மன்னார் நகர சபை உறுப்பினர்

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் நகர சபைக்குட்;பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றி கொட்டுவதற்கு  இடப்பற்றாக்குரை காணப்படுவதாகவும் இதனால் நகர சபையினால் கழிவுகளை துரிதகதியில் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வந்த கடும் மழையின் காரணமாக மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்களினால் கழிவுகளை அகற்ற முடியாத நிலை காணப்பட்டதோடு தாமதமும் ஏற்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்பட்ட கழிவுகள் தனியார் ஒருவருடைய காணியில் தாழ்வான பகுதியில் கொட்டப்பட்டு மண் அகழப்பட்டு வந்தது.

தற்போது குறித்த தனியார் காணியில் மண் அகழ்வுக்கு மன்னார் பிரதேசச் செயலாளரினால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குறித்த காணியில் கழிவுகளை கொட்ட தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் உட்;பட நகர சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் சரத் ரவீந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் ஆகியோருடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மன்னார் பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கழிவுகளை சேகரிப்பதற்காக 5 ஏக்கர் அரச காணி மன்னார் நகர சபைக்கு வழங்குவதாக மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. சுத்திகரிப்பு பணியாளர்கள் அகழ்கின்ற கழிவுகளை வீதிகளிலும் வேறு இடங்களிலும் கொட்டியுள்ளனர்.

தற்போது மழை பெய்து கொண்டிருப்பதினால் மக்கள் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு உடனடியாக குப்பைகளை கொட்டுவதற்கான இடம் ஒன்றை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

எனவே சுத்திகரிப்பு பணியில் ஈடுபட விரும்புவோர் மன்னார் நகர சபையுடன் தொடர்பை மேற்கொள்ளுமாறு நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X